Niroshini / 2021 ஜூலை 19 , பி.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மாவட்டத்தில், இன்றைய தினம் (19), 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மைய நாள்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்ககை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், இன்றைய தினம் மாத்திரம் 29 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் ஆவர்.
ஏனையவர்களில் முழங்காவில், பரவிபாஞ்சான், கனகபுரம், மருதநகர், பூநகரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அத்துடன், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற காலியைச் சேர்ந்த தாதி ஒருவருக்கும் தொற்று ஏற்ப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .