Niroshini / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி குளத்தை அபிவிருத்தி செய்து, அதனை சுற்றுலாத்தளமாக அமைப்பதற்கான திட்ட மும்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, அப்பகுதியில் நடை பயிற்சிக்கான வலையம், சிறுவர் பூங்கா, நீரில் பயணக்கும் வகையிலான வசதி, பொழுதுபோக்கு வசதிகள், மின்னொளியூட்டல், வர்த்தக வசதிகள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான திட்டமிடலொன்று, இரணைமடு நீர்ப்பாசனப் பொறியியலாளர் செந்தூரனால், நேற்று (04), குறித்த குளத்தை பார்வையிட வந்த குழுவினரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த திட்டமிடல், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர், அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
குளத்தின் சூழவுள்ள பகுதியில் அணை கட்டப்பட்டு, அதில் நடை பயிற்சிக்கான வசதிகள், இருக்கை வசதிகள் உள்ளடக்கிய முதல் கட்ட பணிகளுக்கு 110 மில்லியன் ரூபாய் செவாகுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago