Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 நவம்பர் 09 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன்
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஒன்பது வருடங்களின் பின்னர், வியாழக்கிழமை (09) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்ணை, 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி கத்தியால் குத்திக் படுகொலை செய்து கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார். அதன்பின்னர் அப்பெண் சடலமாக மீட்கப்பட்டார்
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் CID யினர் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றிய படுகொலைச் செய்யப்பட்ட பெண்ணின் காதலனை கைது செய்தனர்.
அத்துடன் படுகொலைக்கு பயன்படுத்திய கத்தி, அந்த பெண், இறுதியாக வைத்திருந்த அலைலைபேசி மற்றும் உடைகள் என்பவற்றை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குக்கான தீர்ப்பை, கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீன் வழங்கினார்.
தீர்ப்பு வாசித்துக் காட்டப்பட்டது. குற்றவாளியின் இறுதிக் கருத்தும் கேட்கப்பட்டது. தான் நிரபராதி என்றார். அதன்பின்னர், நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டன. அதன்பின்னர், தீர்ப்பின் கீழ் கையொப்பமிட்டு, பேனையை நீதிபதி உடைத்து வீசினார்.
கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை தீர்ப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
12 minute ago
43 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
43 minute ago
2 hours ago
3 hours ago