Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கொரோனா தொற்று காரணமாகவும் பொதுச் சந்தையில் அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதன் காரணமாகவும், கிளிநொச்சி பொது சந்தையை, இன்று (18) முதல் மறு அறிவித்தல் வரை பூட்டப்பட்டுள்ளதாக, கரைச்சி பிரதேச சபையார் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தை பூட்டப்பட்ட போதும், சந்தைக்கு வெளியே, வழமை போன்று பொது சந்தையின் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
சந்தையின் உள்ளே காணப்பட்ட ஓரளவான சுகாதார பாதுகாப்பு கூட வெளியில் காணப்படாத நிலையில், வர்த்தக செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
பொதுச்சந்தையை பூட்டிவிட்டு, வர்த்தகர்களை வெளியில் அனுமதித்து, வழமை போன்று செயற்படுவதற்கு அனுமதி வழங்கிய செயற்பாடு கண்டிக்கத்தக்கது என, பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .