2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சி வர்த்தக நிலையங்கள் பல வழமைக்குத் திரும்பின

எஸ்.என். நிபோஜன்   / 2017 ஜூன் 16 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஹர்தால் காரணமாக, கிளிநொச்சியில் பூட்டப்பட்டிருந்த வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு, கிளிநொச்சியின் வர்த்தக செயற்ப்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

ஹர்தால் காரணமாக, கிளிநொச்சியின் இயல்பு நிலையும் இன்று காலை   பாதிக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டிருந்ததோடு, போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு மாறாக குறைவாகவே  காணப்பட்டன.  

இருப்பினும், இப்பொழுது  கிளிநொச்சியின்  பெரும்பாலான  வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு கிளிநொச்சியின் வர்த்தக  செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

அத்துடன்,  கிளிநொச்சி  பொதுச்சந்தையில்  உள்ள புடவைக் கடைகள் மற்றும் கிளிநொச்சி  நகர்ப்புறங்களில் உள்ள  ஒருசில கடைகள்  மட்டுமே  இப்பொழுதும் பூட்டப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .