2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சி வைத்தியசாலையில் உள்ளகப் பயிற்சிக்கு அனுமதி

Editorial   / 2017 ஜூன் 03 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

 

கிளிநொச்சி மாவட்டப் பொதுவைத்தியசாலைக்கு உள்ளகப்பயிற்சி மருத்துவர்களை நியமிப்பதற்கான அனுமதியை இலங்கை மருத்துவ சபை,  மத்திய சுகாதார அமைச்சுக்கு கடந்த வாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாணத்தில் தற்போது யாழ். போதனா  வைத்தியசாலை மற்றும் வவுனியா பொது மருத்துவமனை ஆகியவற்றில் மட்டுமே மருத்துவர்கள் உள்ளகப் பயிற்சிக்காக (Internship) நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில், எதிர்வரும் நவம்பவர் மாதம் முதல், மருத்துவர்களது உள்ளகப் பயிற்சிக்கான முதலாவது அணி, கிளிநொச்சி மாவட்டப்பொது வைத்தியசாலைக்கு நியமிக்கப்படலாம் எனத்தெரியவருகிறது.

குறித்த வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு மேம்பட்ட சிகிச்சையினை வழங்குவதற்கான மருத்துவ மற்றும் ஆளணி வசதிகள் காணப்படுவதாக இலங்கை மருத்துவசபை திருப்தியடைந்தால் மட்டுமே உள்ளக மருத்துவப் பயிலுனர்களுக்கான நியமன அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உள்ளகப் பயிற்சி மருத்துவர்களை கிளிநொச்சி மாவட்டப் பொதுவைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர்களான மருத்துவர் நிசாதிரணசிங்கே மற்றும் வைத்திய கலாநிதி சரவணபவன் ஆகியோர்மேற்கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாண மருத்துவ பீடாதிபதி வைத்திய கலாநிதி ரவிராஜ் மற்றும் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி தன்ராஜ் ஆகியோர் இலங்கை மருத்துசபையுடன் இது தொடர்பில் சகல நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .