Niroshini / 2021 ஜூலை 11 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு இலங்கைப் போக்குவரத்து சபையின் புதிய பஸ் சேவையொன்று, நாளை (12) முதல் நடைபெறவுள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாணம் - தெல்லிப்பளையில் இருந்து காலை 6.30 மணிக்கு பணயத்தை ஆரம்பிக்கும் இந்தப் பஸ், காலை 7.25 மணிக்கு, கைதடியை சென்றடையும்.
பின்னர், அங்கிருந்து கிளிநொச்சி - அறிவியல் நகருக்கு காலை 8.25க்குச் சென்றடையும்.
மாலை 4.15 மணிக்கு அதே வழித்தடத்தின் ஊடாக, யாழ்ப்பாணம் -தெல்லிப்பளையை குறித்த பஸ் வந்தடையும்.
அரச உத்தியோகத்தர்களின் நலன் கருதி, இந்தப் பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .