2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியிலும் கடைகளை மூட தீர்மானம்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முதமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் 20ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை வர்த்தகர்கள் மூடுவதற்கு தீர்மானித்துள்ளனர் என,  கிளிநொச்சி நகர வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றமையை
தொடர்ந்து  அதனை கட்டுப்படுத்தும் முகமாக, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

 இன்று(18) மாலை, கிளிநொச்சி ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வர்த்தக சங்கத்தின் தலைவர் இ. விஜயசிங்கம்,  செயலாளர் ச. பாஸ்கரன், பொருளாளர் க.ஆனந்தவடிவேல் ஆகியோர் கலந்துகொண்டு, இவ்வாறு தெரிவித்தனர்.

 இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்கள், நாளுக்கு நாள் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர் எனவும் நேற்று (17) மாத்திரம், 257 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் கூறினர்.
 
இதுவோர் ஆபத்தான நிலைமை எனத் தெரிவித்த அவர்கள்,  எனவே வர்த்தகர்களாகிய தாம்
அனைவரும் ஒன்றிணைந்து  வர்த்தக நிலையங்களை  சில நாள்களுக்கு பூட்டு தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தீர்மானித்துள்ளோம் என்றும்  கூறினர்.

"அந்த வகையில் எதிவரும் 20 ஆம் திகதி முதல் 28 திகதி வரை மருந்தகங்கள், வாகன திருத்தகங்கள் தவிர ஏனைய அனைத்து வியாபார நிலையங்களையும்
பூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் காலப்பகுதிகளில் வர்த்தகர்கள் அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள  கொரோனா பரிசோதனை, மேற்கொள்ளும் இடங்களில்  தங்களை பரிசோதித்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்"  எனவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X