2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் 100 ஏக்கர் நெல் பாதிப்பு

Freelancer   / 2023 ஜனவரி 17 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி குமுழமுனைப் பகுதியில் 100 ஏக்கர் வரையான நெற்பயிர் அழிவடையும் ஆபத்தில் உள்ளதென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கரியாலை நாகபடுவான் குளத்தின் ஒரு பகுதியாகவுள்ள குமுழமுனைப் பகுதியின் 100 ஏக்கர் விளையும் பருவத்தில் வயல் நீரின்றி அழிவடையும் நிலையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு நீரைக் கொண்டு செல்ல வேண்டிய பிரதான வாய்க்கால் நீண்ட காலமாக திருத்தம் செய்யப்படாது காணப்படுகிறது எனத் தெரிவித்த விவசாயிகள், மழைவீழ்ச்சி இம்முறை குறைவாகக் காணப்பட்டதோடு கரியாலை நாகபடுவான் குளத்துக்கான நீர் வரத்து குறைந்தமையே விவசாயம் பாதிக்கப்பட்டமைக்கு காரணமாக அமைந்துள்ளதென விவசாயிகள் தெரிவித்தனர்.

தற்போது கரியாலை நாகபடுவான் குளத்தின் மேற்கொள்ளப்பட்டுள்ள காலபோக நெற்செய்கை நீர்ப்பாசனம் மேற்கொள்வதிலும் தாங்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .