2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் 26 வயதுடைய இளைஞன் கொடூரமாக கொலை

Freelancer   / 2023 ஜனவரி 01 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞன் ஒருவன்  கொலை செய்யப்பட்டுள்ளான்.

இன்று (01) அதிகாலை 4 மணியளவில் வீடு புகுந்த நபர்கள் தவக்குமார் சுரேஸ் என்ற இளைஞனை கத்தியால் குத்தியும், பலமாக தாக்கியும் உள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இளைஞனை அயலவர்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் வழியிலேயே இறந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொலை தொடர்பாக  மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .