Princiya Dixci / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி, முழங்காவில் பிரதேசத்தில் சுமார் 50 ஏக்கர் வரையான வாழைத்தோட்டங்கள் புரெவிப் புயலால் அழிவடைந்துள்ளன என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடும் மழை மற்றும புயல் காரணமாக, குழைகளுடன் வாழை மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. மிகவும் சிரமத்துக்கு மத்தியில் கடந்த வரட்சிக் காலத்திலும் பாதுகாத்து வளர்த்தெடுத்த வாழை மரங்கள் அறுவடைக்கு முன் இவ்வாறு அழிவடைந்துள்ளமை தங்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
முழங்காவில் பிரதேசம் அதிகளவு வாழைச்செய்கை பிரதேசமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
14 Nov 2025