2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் ஏற்பட்ட திடீர் அனர்த்தம்

Freelancer   / 2022 மார்ச் 19 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கர்

கிளிநொச்சி மாவட்டத்தில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன. 

நேற்று மாலை 5 மணி நிலவரத்தின் படி செல்வா நகரில் மூன்று வீடுகளும் கிருஷ்ணாபுரத்தில் 5 வீடுகளும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட இடர்முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை மரம் முறிந்து விழுந்ததில் ஒரு வீடு சேதமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.

பிற்பகல் 3 மணியளவில் வானிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X