Editorial / 2019 பெப்ரவரி 02 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
போதைப் பொருட்களுக்கு எதிராகவும், தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இன்று கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 9 மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்தியிலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, கிளிநொச்சி பொலீஸ் நிலையம் வரை சென்றடைந்து. அங்கு கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலீஸ் மா அதிபருக்கான மகஜரும் கையளிக்கப்பட்டது.
போதையை ஒழிக்கும் பாதையை வளர்ப்போம், போதைப் பொருட்களிலிருந்து எம் மாணவர்களை பாதுகாப்போம், போதை அது சாவின் பாதை, வேண்டாம் போதைப் பொருள் வேண்டாம், போதைப் பொருளிலிருந்து எம் சமூகத்தை பாதுகாப்போம்,கஞ்சாசையும் கசிப்பையும் குடித்து உன் வாழ்வை சிதைக்காதே, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தவாறு பேரணி இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago