2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

கிளிநொச்சியில் காணிப் பிணக்குகள் அதிகரிப்பு

George   / 2017 ஜூன் 02 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான காணிப்பிணக்குகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், அரச திணைக்களங்களில் சேவையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி  மாவட்டத்தின் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக, காணி உரிமை மாற்றங்கள், காணி நடமாடும் சேவைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், தற்போது காணிப்பிணக்குள் அதிகரித்து காணப்படுகின்றன.

இதனால், அரச திணைக்களங்கள் ஏனைய திணைக்களங்கள் காணி விடயங்களை கையாளுகின்ற திணைக்களங்களில் அதிகளவான வேலைப்பழு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர், கிளிநொச்சி மாவட்டத்தில் சில அரசியல்வாதிகள் தங்களுடைய சுய நோக்கத்துக்கதக பல காணிகளை வழங்கியிருந்தனர்.

குறிப்பாக, சோலைநகர்ப்பகுதியில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு ஐந்து ஏக்கர் காணி முறைகேடாக வழங்கப்பட்டது. தற்போது, அந்தக் காணியில், பல்வேறு அபிவிருத்தி வேலைகளை அந்த நபர் முன்னெடுத்துவருகின்றார்.

இந்நிலையில், குறித்த காணி விடயம் கடந்த திங்கட்கிழமை (29) இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தின் கவனத்துக்கு சோலைநகர் அபிவிருத்திச்சங்கத்தினரால் கொண்டுவரப்பட்டது.  

இதன்போது, முறைகேடாக வழங்கப்பட்ட காணியை தனியாரிடமிருந்து மீளப்பெற்று கிராம அபிவிருத்திச்சங்கத்துக்கு வழங்குமாறு கோரப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .