Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 செப்டெம்பர் 10 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதாரத் துறையில், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் உட்பட 113க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள், தமக்கான மருத்துவ தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. மாவட்டத்திலுள்ள பல வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை காணப்படுகின்றது. இதை விட ஏனைய ஆளணி மற்றும் பௌதிக தேவைகளும் அதிகளவில் காணப்படுகின்றன,
தற்போதைய ஆளணி விபரங்கள் தொடர்பில் மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்திய துறைக்கு, தற்போதுள்ள தேவைகளின்படி 113க்கும் மேற்பட்ட ஆளணி வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 19 வைத்திய நிபுணர்கள் தேவையான நிலையில் 17 வைத்திய நிபுணர்களும் 108 வைத்தியர்கள் தேவையான நிலையில் 85 வைத்தியர்களும் 13 பல் வைத்தியர்கள் தேவையான நிலையில் 10 பல் வைத்தியர்கள் மாத்திரமே தற்போது கடமையாற்றி வருகின்றனர்.
இதேவேளை, 122 தாதிய உத்தியோகத்தர்கள் தேவையான நிலையில், 91 தாதிய உத்தியோகத்தர்களும் 99 குடும்பநல உத்தியோகத்தர்கள் தேவையான நிலையில் 61 குடும்பநல உத்தியோகத்தர்களும் கடமையாற்றுகின்றனர்.
இதைவிட, பொதுச் சுகாதார பரிசோதர்கள், மருந்துக் கலவையாளர், தடுப்பூசி வழங்குநர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 23 பதவி நிலைகளில் கடமையாற்ற வேண்டிய 1,058 ஆளணி வளத் தேவைகள் காணப்படுகின்ற நிலையில், 945 பேர் மாத்திரமே கடமையாற்றி வருவதுடன் 113 பேருக்கான பணிநிலை வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago