2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் தொடர் மழை

Niroshini   / 2021 நவம்பர் 02 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் பல தாழ் நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

இருப்பினும், வெள்ளத்தால் இடம்பெயர்ந்து செல்லும் நிலைமை ஏற்படவில்லை என, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற மக்கள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துளளனர். அவர்களது வீடுகளுக்குள்ளும் மழை நீர் சென்றுள்ளது. கடந்த காலத்தில் நிரந்தர வீட்டுத் திட்டங்களுக்கு உள்வாங்கப்பட்டு, ஆரம்ப கட்டக் கொடுப்பனவுகளை மட்டும் வழங்கப்பட்டு மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்படாது வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாதுள்ள மக்கள்  பெய்து வருகின்ற மழை காரணமாக நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.

அத்தோடு, மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. 10அடி 6அங்குலத்தை கொண்ட கனகாம்பிகைக்குளம் 10.அடி 6.5 அங்குலத்துக்கு நீர் மட்டம் அதிகரித்தமையால் 0.5' அங்குலத்துக்கு தற்போது வான்பாய ஆரம்பித்துள்ளது.

மேலும், வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் இராணுவம்,  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், பிரதேச செயலகங்கள பணிகளில் ஈடுப்பட்டும் வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .