2025 மே 12, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் நாளை விசேட கூட்டம்

Niroshini   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் காரணமாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்குடனான விசேட கலந்துரையாடல் ஒன்று, நாளை (28) காலை 11 மணிக்கு, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கலந்துiராடலுக்கு கிளிநொச்சி மாவட்ட செயலாளர் மற்றும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகியவற்றின் மாவட்ட செயலாளர்களின் பிரதிநிதிகள், குறித்த மாவட்டங்களின் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர்கள், கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கூட்டத்தில் கலந்துகொள்கின்றவர்கள் அனைவரும் சமூக இடைவெளிகளைப் கடைப்பிடிப்பதுடன், சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X