2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் நீதிமன்ற தொகுதி

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார், மு. தமிழ்ச்செல்வன்,எஸ்.என்.நிபோஜன்

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர். சட்டத்தரணி தலதா அத்துகோரலவின் அழைப்பின் பேரில், கிளிநொச்சியில் புதிய நீதிமன்றத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, பிரதம நீதியரசர் பியசாத் டெப் ​தலைமையில் இன்று (03) நாட்டப்பட்டது. 

மூன்று மாடிகளைக் கொண்ட மேற்படி கட்டடத்தொகுதிக்கு 380 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் மற்றும் நீதவான்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் இரண்டு, இந்த புதிய தொகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளன.

வட மாகாணத்தில் நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில், புதிய நீதிமன்றக்கட்டடத் தொகுதிகளின் நிர்மாணப்பணிகள், அடுத்தவருடம் நிறைவடையவிருக்கின்றன என  அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X