2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கிளிநொச்சியில், வடமாகாணத்துக்கான சர்வதேச பெண்கள் தினம்

Editorial   / 2018 மார்ச் 08 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாணத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று (08)  கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி பழைய மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இருந்து ஆரம்பமான பெண்கள் தின ஊர்வலம், கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தைச் சென்றடைந்து அங்கு நிகழ்வுகள் இடம்பெற்றன.

வடக்கு மாகாண பெண்கள் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஜரோப்பிய ஒன்றியத்தின் பதில் தூதுவர் போல் கோட்ப்றே, இலங்கைக்கான தென்னாபிரிக்காவின்  உயர்ஸ்தானிகர் றொபினா பி.மார்க்ஸ், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், மாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம், கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும்   தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகள் என பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .