2025 மே 19, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் வானிலை வழமைக்குத் திரும்பியுள்ளது

Editorial   / 2019 டிசெம்பர் 13 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்    

கிளிநொச்சியில்,  கடந்த சில வாரங்களாக நிலவி வந்த  சீரற்ற வானிலை தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது.

இருப்பினும், வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த பொது மக்கள் இன்னும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை.  அவர்களது வீடுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டமையினாலும், இரணைமடு வான்கதவுகள் நான்கு  தற்போதும்  ஆறு இஞ்சி அளவில் திறந்துவிடப்பட்டள்ளதாலும் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களின் நிலைமைகள் இன்னும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை.

தற்போது அவ்வப்போது சாதாரணமாக மழை பெய்து வருவதனாலும், மாங்குளம், வவுனியா பிரதேசங்களில் பெய்யும் மழை காரணமாக இரணைமடு குளத்திற்கு  நீர் தொடர்நதும் வந்துகொண்டிருப்பதனாலும்   இரணைமடுகுளத்தின் நான்கு வான்கதவுகள் ஆறு இஞ்சி அளவில் திறந்து விடப்பட்டுள்ளதாலும்,  பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக திரும்பவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X