Niroshini / 2021 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில், விதை நெல்லுக்கான நெருக்கடி காணப்படுகின்றது.
சிறுபோக நெற்செய்கை கூடுதலாக விதை நெல் உற்பத்தியை இலக்காக கொண்டதாக இருந்தாலும், நெல்லை அறுவடை செய்தவுடன், பச்சை நெல்லாக விவசாயிகள் கூடுதலாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக. விதை நெல்லுக்கான நெருக்கடி காணப்படுவதாக, விவசாயிகளால் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுபோக கூட்டங்களை நடத்துகின்ற அதிகாரிகள், விதை நெல் உற்பத்தி தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
அதுமட்டுமன்றி, கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த பத்தாண்டுகளாக போதிய நெல் உலர விடும் தளங்கள் அமைக்கப்படவில்லை, களஞ்சிய வசதிகள் இல்லை.
இதன்; காரணமாக, வீதிகளில் விவசாயிகள் நெல்;லை உலர விடுகின்ற அவலம் காணப்படுகின்றது. அத்துடன், கூடுதலான விவசாயிகள் நெல்லை உலர விடாமல், நெல்லை அறுவடை செய்தவுடன், அவற்றை விற்பனை செய்கின்றனர்.
இந்த நிலைமை காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் விதை நெல்லுக்கான நெருக்கடி தொடர்வதாக, அப்பகுதி விவசாயிகளால் தெரிவிக்கப்படுகின்றது.
9 minute ago
36 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
36 minute ago
57 minute ago
1 hours ago