2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவேந்தல்

Freelancer   / 2023 நவம்பர் 27 , பி.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை  செய்யப்பட்ட  மாணவர்களின் நினைவேந்தல் ஐயன்கன்குளம் பகுதியில்  உணர்வு பூர்வமாக இடம்பெற்றது

முல்லைத்தீவு துணுக்காய்  - ஐயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரினால் நோயாளர் காவு வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 16ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

இத் தாக்குதலில் ஆறு மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இருவர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.இவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உயிரிழந்த மாணவ செல்வங்களின் நினைவிடத்தில் இடம்பெற்றது.

நோயாளர் காவுவண்டியில் பாடசாலை சீருடையுடன் பயணித்த மாணவிகளான - "நாகரத்தினம் பிரதீபா (வயது-16), நாகரத்தினம் மதிகரன் (வயது-15), நித்தியானந்தன் நிதர்சனா (வயது-13), கருணாகரன் கௌசிகா (வயது-15), சந்திரசேகரம் டிறோஜா (வயது-16), அற்புதராசா அஜித்நாத் (வயது-17)ஆகிய ஆறு மாணவர்கள் மற்றும் சுகாதாரத் தொண்டர்களான சண்முகவடிவேல் சகுந்தலாதேவி (வயது-19), மாரிமுத்து கிருஸ்ணவேணி (வயது-21)" ஆகியோருமாக எட்டுப்பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

நினைவு நிகழ்வில் பொது சுடரினை சம்பவத்தில் பலியான மாணவிகளில் தந்தை  ஏற்றி வைக்க சம நேரத்தில் ஏனைய உறவுகள் சுடரேற்றி அஞ்சலி செய்தனர்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பிள்ளைகளின் புகைப்படங்களை வைத்து மலர் தூவி அவர்களுக்கான அஞ்சலியை செலுத்தினர்

குறித்த பகுதியை சூழ இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களின் வருகை  அதிகரித்து  கானப்பட்டிருந்தமை குறிப்பிடத்தகது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X