2025 மே 15, வியாழக்கிழமை

கீரி கடற்கரையில் சிரமதானம்

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சர்வதேச கரையோர தூய்மையாக்கல் தினத்தை முன்னிட்டு, மன்னார் மாவட்டக் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலகத்தின் அனுசரணையில் மன்னார் கீரி கடற்கரை பகுதியில் இன்றைய தினம் (23) காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.

இதன்போது, மாவட்டக் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம், மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு ஆகியன இணைந்து கீரி கடற்கரையை  தூய்மையாக்கும் செயற்றிட்டத்தில் ஈடுபட்டன.

இதன்போது பொலிஸார், இராணுவம், கடற்படை, வான்படையினர் மற்றும் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், மன்னார் நகர சபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் ஆகியோர் இணைந்து, கீரி கடற்கரையில் மாபெரும் சிரமதான பணியை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .