Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியுடன், கீரிமலை பகுதியில் 2ஆம் கட்ட வீட்டுத்திட்டப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக, தெல்லிப்பளை பிரதேச செயலக தகவல்கள் தெரிவித்தன.
இத்திட்டத்தில் 25 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் துரிதகதியில் முன்ணெடுக்கப்படுகின்றது. காணியற்று உடுவில் மற்றும் தெல்லிப்பளை பகுதியில் உள்ள நலன்புரி முகாமில் வசித்து வரும் 25 குடும்பங்களுக்கே இவ்வாறு காணியுடன் வீட்டுத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
இதற்காக மீள்குடியேற்ற அமைச்சின் நிதி செலவு செய்யப்படுகின்றது. மனித வலுவை இராணுவத்தின் பொறியியல் படைப்பரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்திட்டத்தின் முதல்கட்டமாக, கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியில், முதலாம் கட்டத்தில் 100 வீடுகளும், பின்னர் அதே பகுதியில் 33 வீடுகளுமாக 133 வீடுகளை இராணுவத்தினர் நிர்மாணித்து வழங்கியிருந்தனர்.
இதன் இரண்டாவது கட்டமாக, கீரிமலையின் தெற்கு புறத்தில் 25 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வரப்படுகின்றன. குறித்தொதுக்கப்பட்ட பகுதியில், அத்திபாரம் வெட்டி ஆரம்ப வேலைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
குறித்த வீட்டுத்திட்டம், இவ்வருட இறுதிக்குள் முடிவுறுத்தப்பட்டு, பயணாளிகளிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago