Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 26 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக, வடக்கு மாகாணமும் கடும் தாக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக, குடிநீர் உள்ளிட்ட நீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதில், கடும் நெருக்கடிகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
கரைச்சி பிரதேச சபை, வரட்சியால் அதிகம் பாதிப்புக்குள்ளாக்கியுள்ள கிராமங்களுக்கு, நீர்த் தாங்கி மூலம் குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் குடிநீர் விநியோகத்துக்கு நீரைப் பெற்றுக்கொள்வதற்கு, கரைச்சி பிரதேச சபையும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறது என, பிரதேச செயலாளா் க. கம்சநாதன் தெரிவித்துள்ளார்.
கரைச்சி பிரதேச சபை, செருக்கன் கிராமத்துக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையும், ஆனையிறவு, தட்டுவன்கொட்டி, உமையாள்புரம் கிராமங்களுக்கு, ஒன்று விட்டு ஒரு நாளைக்கும் என, நீர் விநியோக நடவடிக்கைகளில ஈடுபட்டு வருகிறது. இதற்காக, நாளாந்தம் 24,000 லீற்றர் நீர், இரண்டு கிணறுகளில் இருந்தும் பெறப்படுகிறது.
கரைச்சி பிரதேச சபையின் கிணறு மற்றும் கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்கள கிணறு என்பற்றில் இருந்தே, நீர் பெறப்படுகிறது. ஆனால் கரைச்சி பிரதேச சபைக் கிணற்றில், நீர் வெகுவாக வற்றிய நிலையில், கிணற்றின் அடி மட்டத்துக்குச் சென்றுள்ளது. 4,000 லீற்றர் நீரைப் பெறுவதற்கு, சுமார் நான்கு மணித்தியாலயங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும் என்றும், அதுவும் இன்னும் சில நாட்கள் மட்டுமே அவ்வாறு அலுவலகக் கிணற்றில் நீரைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும், கம்சநாதன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தொடர்ச்சியாக இவ்வாறு வரட்சி நிலவினால், மக்களுக்கு விநியோகிப்பதற்கு கரைச்சி பிரதேச சபையும், புதிய நீர் மூலங்களைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
49 minute ago
53 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
53 minute ago
6 hours ago