2025 மே 08, வியாழக்கிழமை

குடிநீர் தேடி வருபவர்களை அனுப்புகின்றனர்’

Niroshini   / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

குடிநீர் வழங்குங்கள் என வருபவர்களை பிரதேச செயலகத்துக்கு அனுப்புவதாக, துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் அ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர். தற்போது துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் குடிநீர் நெருக்கடி ஏற்படத் தொடங்கி உள்ளதாகவும் பல கிராமங்களில் குடிநீர் நெருக்கடி உருவாகியுள்ளதாகவும் கூறினார்.

இறுதியாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில,; துணுக்காய் பிரதேச சபையிடம் குடிநீர் வழங்கக் கூடிய வாகன வசதி இல்லை என்பதை தெரிவித்துவிட்டேன் எனத் தெரிவித்த அவர், வாகன வசதி உருவாக்கப்பட்டால் குடிநீர் வழங்கலாம் என்ற தகவலையும் தெரியப்படுத்தி இருந்தேன் எனவும் கூறினார்.

'தற்போது பிரதேச சபைக்கு குடிநீர் வழங்குங்கள் என வரும் மக்களை துணுக்காய் பிரதேச செயலகத்துக்கு செல்லுமாறு அனுப்பி வைக்கின்றோம். துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைதிபுரம், ஆரோக்கியபுரம், அம்பலப்பெருமாள்குளம், கோட்;டைக்கட்டியகுளம், தென்னியங்குளம், உயிலங்குளம், ஆலங்குளம், பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான், ஐயன்கன்குளம் உட்பட பல கிராமங்களில் குடிநீர் நெருக்கடி காணப்படுகின்றது. 

இக்கிராமங்களில் காணப்படும் குடிநீர் நெருக்கடிக்கு எதிர்காலத்தில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்' எனவும், தவிசாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X