Editorial / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா – ஓமந்தை, அரசங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள், நேற்று (31) இரவு, புகுந்த 5 அடி நீளமான முதலையால் பதற்ற நிலை ஏற்பட்டது.
அரசங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில், முதலையொன்று புகுந்துள்ளது. வீட்டிலிருந்த நாய் குரைக்கும் சத்தத்தை கேட்டு கதவை திறந்து வெளியே வந்து பார்த்த வீட்டு உரிமையாளர், வீட்டு முற்றத்தில் 5 அடி நீளமான முதலை ஒன்றை அவதானித்துள்ளார்.
இதையடுத்து, இன்று (01) காலை ஸ்தலத்துக்கு விரைந்த வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், முதலையை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விடுவித்துள்ளனர்.
நீர்நிலை தேடியே, இந்த முதலை ஊர்மனைக்குள் வந்துள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
12 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago