2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

குடியிருப்பாளர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பொலிஸார்

Niroshini   / 2021 ஜூன் 14 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், குடியிருப்பாளர்களின் விவரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில், பொலிஸார், இன்று (14) ஈடுபட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர், பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட குடியிருப்பாளர்கள், தங்கியிருப்பவர்களின் விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான படிவம் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றைப் பூரணப்படுத்தி, ஒரு மணிநேரத்தில் வழங்குமாறும், பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'1865ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76ஆவது பிரிவுக்கு அமைவாகச் செய்யப்படும் ஆணை' என, அந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X