Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூன் 02 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியா, செட்டிகுளத்தில் குடும்பஸ்தரொருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா, செட்டிகுளம், சின்னக்குளத்தில் வசித்த 40 வயதுடைய முத்துலிங்கம் கனகராஜா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே, செட்டிகுளம் சண்முகபுரம் பகுதியில் வீதியோரத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
“நேற்று பிற்பகல் 5 மணிக்கு, வவுனியா நகர்பகுதிக்கு செல்வதாகக்கூறி பஸ்ஸில் சென்ற இவர், இரவு சுமார் 9 மணியளவில், தனது மவைியை அலைபேசியில் அழைத்து, தமது கடையின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை எடுத்து விடும்படியும் தான் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாகவும் கூறி, அலைபேசி அழைப்பைத் துண்டித்துள்ளார்.
பின்னர், நீண்டநேரமாகியும் தனது கணவன் வீட்டுக்கு வராதநிலையில், இரவு 10 மணியளவில் அலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்டபோது, அலைபேசி இயங்கவில்லை” என, உறவினர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை செட்டிகுளம் - பூவரசங்குளம் வீதியில் உள்ள சண்முகபுரம் கிராமத்தில் சென்றவர்கள், வீதியோரத்தில் சடலம் கிடப்பதை கண்டு செட்டிகுளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற செட்டிகுளம் பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago