Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Freelancer / 2022 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
எரிபொருள் தட்டுப்பாடான நேரத்தில் அனைவருக்கும் சரியான முறையில் டீசல் பகிர்ந்தளித்த முல்லைத்தீவு - முள்ளியவளை மாஞ்சோலைப்பகுதியில் அமைந்துள்ள குமாரையா மகேந்திரன் என்பவரின் எரிபொருள் நிரப்பு நிலையம் சிறந்த எரிபொருள் நிரப்பு நிலையமாக காணப்பட்டதால் அதன் உரிமையாளரை பாராட்டும் நிகழ்வு ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட டிப்பர் உரிமையாளர் சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
இன்று காலை நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் இ.ரவீந்திரன் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
வடமாகாணத்தில் உள்ள 115 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்களுக்கு சரியான முறையில் எரிபொருளை வழங்கிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் இரண்டாவது நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago