2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

குருந்தூர் மலை போராட்டம்; சின்னராசா லோகேஸ்வரன் கைது

Freelancer   / 2022 செப்டெம்பர் 23 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருந்தூர் மலையில் 21 ம் திகதி இடம்பெற்ற போராட்டம் தொடர்பில்  கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு -  தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலைப்பிரதேசத்தில் தமிழ் மக்களினுடைய 632 ஏக்கர் காணிகள் அபகரிப்பு செய்கின்றமை, மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறி தொல்பொருள் திணைக்களத்தினர் விகாரை கட்டுமான பணியினை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றமையை எதிர்த்து 21.09.2022 அன்று குருந்தூர் மலை பகுதியில் மக்கள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இணைந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தின் பின்னர் தொல்பொருள் திணைக்களத்தை சார்ந்தவர்கள் “தங்களுடைய கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் தங்களை அச்சுறுத்தும் வகையில் செய்யப்பட்டதாகவும் தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டின் பின்னணியில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் ஆகியோரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்து நேற்று (22) நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தி   பிணை வழங்கப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X