Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 நவம்பர் 10 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தில், குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கி உள்ள நிலையில், சிறுவர்கள் குளப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என, நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.
குளங்களின் வான் பாய்கின்ற பகுதிகளுக்கோ அணைக்கட்டுப் பகுதிகளுக்கோ குளங்களைப் பார்வையிடச் செல்ல வேண்டாம் எனவும் இது தொடர்பாக பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் செயற்படுமாறும், அதிகாரிகள் தெரித்தனர்.
குறிப்பாக, சிறுவர்கள் குளங்களில் நீராடுவதற்குச் சென்று உயிராபத்துகளை கடந்த காலங்களில் எதிர்கொண்டதன் காரணமாக, பெற்றோர்கள் தமது பிள்ளைகளை குளச் சூழலுக்குள் செல்வதைக் கட்டுப்படுத்துமாறும், அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிராமங்களில் அபிவிருத்திக்காக அமைக்கப்பட்ட பாரிய குழிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதன் காரணமாக, அக்குழிப் பகுதிகளுக்கு சிறுவர்களை செல்ல வேண்டாம் என கிராம தோறும் கிராம அலுவலர்களினால் தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மழை காலங்களில் சிறுவர்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்படியும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago