Editorial / 2019 மார்ச் 25 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய நீர்ப்பாசனக்குளங்கள் மற்றும் பாரிய நீர்ப்பாசனக்குளங்களைப் புனரமைக்க வேண்டிய தேவை காணப்படுவதாகத் தெரிவித்த விவசாய அமைப்புகள் இவற்றைப் புனரமைத்துத்தருமாறும் கோரியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில், 228க்கும் மேற்பட்ட சிறிய நீர்ப்பாசனக்குளங்கள் காணப்படுகின்றன.
குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்த காலத்தில் செய்கை பண்ணப்படாது கைவிடப்பட்ட விவசாய நிலங்களும் சிறிய நீர்ப்பாசனக்குளங்களும் அதிகளவில் காணப்பகின்றன.
இவ்வாறு காணப்படுகின்ற குளங்களைப் புனரமைத்து, விவசாய நிலங்களை பகிர்ந்தளிக்குமாறு, தொடர்ச்சியாக கோரிக்கைவிடுத்து வருகின்றபோதும், சில குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் கீழுள்ள விவசாய நிலங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு வனவளத் திணைக்களம் தடையாக இருப்பதாகத் விவசாய அமைப்புகள் தெரிவித்தன.
எனவே, இவற்றை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் விவசாய அமைப்புகள் கோரியுள்ளன.
21 minute ago
36 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
36 minute ago
3 hours ago