2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

‘குளங்களைப் புனரமைப்பதற்கான ஒப்பந்தங்கள் வௌ்ளியன்று கைச்சாத்து’

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள ஏழு குளங்களைப் புனரமைப்பதற்கான ஒப்பந்தங்கள், வௌ்ளிக்கிழமை (25) கைச்சாத்திடப்படவுள்ளதாக, மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரணைமடுக்குளம் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ள போதும், ஏனைய குளங்களின் புனரமைப்புப் பணிகள் கடந்த காலங்களில் பகுதியளவில் முன்னெடுக்கப்பட்டாலும் பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், தற்போது, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கல்மடுக்குளம், அக்கரயான்குளம், பிரமந்தனாறுக்குளம், குடமுருட்டிக்குளம், கரியாலை நாகபடுவான் குளம், வன்னேரிக்குளம், கனகாம்பிகைக்குளம் உள்ளிட்ட பாரிய நீர்ப்பாசனக் குளங்களை, உலக வங்கியின் நிதியுதவியுடன் புனரமைப்பதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, இக்குளங்களைப் புனரமைப்பதற்கு 1,620 மில்லியன் ரூபாய் நிதி தேவையென மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புனரமைப்புப் பணிகள் அடுத்தாண்டு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கான ஒப்பந்தங்கள், வௌ்ளிக்கிழமை (25) கைச்சாத்திடவிருப்பதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X