Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களில் பின்னடைவு காணப்படுவதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், மாந்தை கிழக்குக்கான முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகின்ற மாணவர்களை பாடசாலை நேரங்களில் பஸ்கள் சேவையில் ஈடுபட்டு ஏற்றி இறக்க வேண்டும் என்ற தீர்மானங்களை இறுதியாக நடைபெற்ற கூட்டங்களில் எடுத்ததாகவும் ஆனால் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லையெனவும் கூறினார்.
இதன் காரணமாக, மாணவர்கள் தொடர்ச்சியாக போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனரெனத் தெரிவித்த அவர், கூட்டங்களில் கலந்து கொள்கின்ற அதிகாரிகள் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
அவ்வாறு நடைமுறைப்படுத்தாவிட்டால் தீர்மானங்கள் எடுப்பதில் பயனில்லை எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago