Niroshini / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில், வவுனியா அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. திலீபன் நடத்திய கூட்டத்தில், 80 சதவீதமான பாடசாலைகள் திறக்கும் என தெரிவிக்கப்பட்ட போதிலும், அது பொய்த்துப் போயுள்ளது.
அதிபர் - ஆசிரியர்கள் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில், வவுனியா மாவட்டத்தில், பாடசாலையை ஆரம்பிப்பது தொடர்பில், கடந்த செவ்வாய்க்கிழமை (19), பிரதேச செயலகத்தில், கல்வித் திணைக்கள அதிகாரிகளுடன் சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது, 21ஆம் திகதியன்று அதிபர் ஆசிரியர்களுடன் பாடசாலைகள் திறக்கப்படும் எனவும் அது 80 சதவீதமாக இருக்கும் எனவும், கல்வித் திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இன்று (21), வவுனியாவில், ஒரு சில பாடசாலைகளை தவிர ஏனைய பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
இதனூடாக, அபிவிருத்தி குழு தலைவர் நடத்திய கூட்டம் பொய்த்துப்போயுள்ளதாக, பலராலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
12 minute ago
35 minute ago
40 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
35 minute ago
40 minute ago
50 minute ago