2025 மே 07, புதன்கிழமை

கூட்டத்தில் சார்ள்ஸ் எம்.பி மீது பாய்ந்த அமைச்சர்

Niroshini   / 2020 நவம்பர் 08 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இங்கே வந்து அரசியல் செய்ய வேண்டாம் என, சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பியை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சாடினார்.

கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுக் கூட்டம், அண்மையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது, கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மகாவலி அதிகார சபையால் தமிழர் கிராமங்கள் சிங்கள கிராமங்களாக பெயர்மாற்றப்பட்டு அங்கே சிங்கள குடியேற்றங்கள் குடியேற்றப்பட்டிருக்கிறதென்றார்.

இந்த விடயம் தொடர்பாக 13 எம்.பிகள் கையெழுத்திடப்பட்ட கடிதம் ஒன்றை அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொடுத்திருந்தோமெனத் தெரிவித்த அவர், இந்தத் திட்டத்தால் தங்களுடைய மக்களுடைய இடங்கள் பறிக்கப்பட்டு, ஏனைய மாவட்டங்களில் உள்ள மக்கள் இங்கே குடியேறும் ஆபத்து இருக்கிறதெனவும் ஆகவே இப்போதைக்கு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமெனவும், கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, இங்கே அரசியல் செய்யாமல், தாங்கள்  சொல்வதை கேளுங்கள் என கடினமான தொனியில் சார்ள்ஸ் நிர்மலநாதனைச் சாடினார்.

மேலும் நீங்கள் கூறுவது முற்றிலும் தவறாதெனத் தெரிவித்த அமைச்சர், மகாவலி அமைச்சினால் அனைத்து பகுதியினருக்கும் இடம் ஒதுக்கப்படிருக்கிறதெனவும் பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்டும் இருக்கிறதெனவும் கூறினார்.

'யார் வேண்டுமானாலும் வந்து விவசாயம் செய்யலாம். உங்களிடம் யாராவது இருந்தாலும் கேளுங்கள், அதை விடுத்து யாரும் கொண்டுவது அமர்த்தியிருக்கிறார்கள் என்று அரசியல் செய்யாதீர்கள்' என, அமைச்சர் கடுமையாகச் சாடினார்.

அதன் பின்னர், சார்ள்ஸ் நிரமலநாதன் எம்.பி அமைதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X