2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘கூட்டத்தை விரைவாக நடத்த வேண்டிய தேவை உள்ளது’

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஏழு வரையான நீர்ப்பாசனக் குளங்களில் பாரிய அபிவிருத்தி வேலைகள் உலக வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கவிருப்பதால், சிறுபோக பயிர்ச்செய்கைக்கான கூட்டங்கள் விரைவாக நடத்த வேண்டிய தேவை காணப்படுவதாக, கிளிநொசக்சி மாவட்ட நீர்ப்பாசனப் பொறியிலாளர் சி.பரனிதரன் தெரிவித்தார்

இது தொடர்பில், தொடர்ந்துரைத்த அவர், கனகாம்பிகைக்குளம், கரியாலை நாகபடுவான் குளம், குடமுருட்டிக்குளம், அக்கராயன்குளம், வன்னேரிகுளம், கல்மடுக்குளம், பிரமந்தனாறுக்குளம் ஆகிய குளங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் மேற்படி குளங்களை உலக வங்கியினுடைய பிரதிநிதிகள் பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தப் பாரிய அபிவிருத்தி வேலைகளை உரிய காலத்தில் முன்னெடுப்பதற்கு வசதியாக, சிறுபோக பயிர்ச் செய்கைகளை ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இந்நிலையில், இம்மாத நடுப் பகுதியில் சிறுபோகக் கூட்டங்களை நடத்த வேண்டிள்ளதாகவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .