2025 மே 21, புதன்கிழமை

‘கூட்டமைப்பின் நம்பிக்கை வீணானது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

ஐக்கிய ​தேசிய முன்னணி அரசாங்கத்துக்குத் தொடர்ச்சியாக ஒட்சிசன் வழங்கிக்கொண்டிருந்ததால் தான், தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கை வீணாகிவிட்டதெனத் தெரிவித்த, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, ஒரு புதிய நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக, தங்கள் அணியுடன் ஒன்றிணையுமாறும் கோரிநின்றார்.

வவுனியா, இரட்டைப்பெரியகுளத்தில் உள்ள விருந்தினர் விடுதியில், தனது ஆதரவாளர்களை இன்று (20) சந்தித்த பின்னர், ஊடகவியலாளர் ஒருவர், “ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆதரவளிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவீர்களா” எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே, தினேஸ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு மக்களுடைய கட்சியாகும். அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது, அப்பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு கோரியிருந்தோம். எனினும், கூட்டமைப்பு அவ்வாறு செய்யவில்லை” என்றார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அன்று ஆதரவளித்திருந்தால், அரசாங்கத்தை அன்றே வீட்டுக்கு அனுப்பி இருக்கலாமெனத் தெரிவித்த அவர், அரசாங்கத்துக்கு ஒட்சிசன் வழங்கும் செயற்பாடுக​ளையே, கூட்டமைப்பு முன்னெடுத்தது. அப்படிச் செய்தால்தான், தீர்வு கிடைக்குமென நம்பியிருந்தது. எனினும், ஒட்சிசன் வீணாகிப்போனதே தவிர, தீர்வெதுவும் கிடைக்கவில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .