2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கூட்டுறவுச் சங்கம் ஊடாக உணவகம் இயக்க முயற்சி

Editorial   / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் உணவகம் இயங்காததன் காரணமாக அக்கராயன் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஊடாக உணவகம் ஒன்றினை இயக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள அக்கராயன் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடம் ஒன்றில் குறித்த உணவகம் இயங்குவதற்கான புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.

அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் உணவகம் இயங்காததன் காரணமாக 800 மீற்றருக்கு அதிகமான தூரம் சென்றே நோயாளர்கள் உணவுகளை கடைகளில் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை தற்போது காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .