2025 நவம்பர் 15, சனிக்கிழமை

’கூட்டுவலைப் பயன்பாடு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்’

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

நந்திக்கடல் முகாமைத்துவக் குழுவைச் சிறந்த ஒரு பொறிமுறைக்குட்படுத்தி கூட்டுவலைப் பயன்பாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை  மேற்கொள்வோமென, முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கா. மோகனகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், காட்டுப் பிரதேசங்கள் மற்றும் சன நடமாட்டங்கள் அற்ற பகுதிகளைப் பயன்படுத்த அவ்வாறான சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதென்றார்.

“குறிப்பாக தற்போது நீர்மட்டத்திற்குக் கீழே அந்த வலைகளைப் புதைத்து சிறிய நண்டுகள் மற்றும் மீன்களைப் பிடிக்கின்ற முயற்சி இடம்பெறுகின்றது.

“நந்திக்கடல் முகாமைத்துவக் குழுவுடன் இணைந்து, கடற்றொழில் பரிசோதகர்கள், கடற்றொழில் திணைக்களம் இந்த நடவடிக்கைக்கு எதிராக கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

“இது தொடர்பில் கணிசமான வழக்குகள் முல்லைத்தீவு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இருந்தபோதும் தொடர்ச்சியாக இவ்வாறான சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X