2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கூலர் வாகனம் குடைசாய்ந்தது

Niroshini   / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
 
வவுனியா - புளியங்குளம் பகுதியில், இன்று (11) காலை 9.30 மணியளவில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கூலர் ரக வாகனம் ஒன்று, குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
 
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு, குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சிகளை ஏற்றிச் சென்ற கூலர் ரக வாகனம், புளியங்குளம் சந்திக்கு அருகில் வைத்து  வீதியை கடக்க முற்பட்ட போது,  கட்டாக்காலி மாடு ஒன்று வீதிக்கு குறுக்கே பாய்ந்துள்ளது.
 
இதனால்,  கூலர் ரக வாகனம் ஒன்று, குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. 
 
வாகனத்தில் பயணித்த எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை. அத்துடன், ஏற்றிச் செல்லப்பட்ட கோழி இறைச்சிகளுக்கும் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .