2025 மே 03, சனிக்கிழமை

கெப் வாகன சந்தேகநபர்களுக்கு வலைவீச்சு

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 18 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ-9 வீதியின் ஓமந்தை பிரதேசத்தில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில், கடமையிலிருந்து இராணுவ வீரர்கள் இருவர், அவ்வழியே வந்த கெப் வாகனமொன்றை தடுத்து நிறுத்த முற்பட்ட போது, அது குறித்த இராணுவ வீரர்கள் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அந்த கெப் வானத்தை துரத்திச் சென்ற போது, அது வீதியிலிருந்து விலகி விபத்துக்குள்ளாகியிருந்ததாகவும், அதனைச் செலுத்தி வந்த சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காயமடைந்த இராணுவ வீரர்கள் இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான கெப் வாகனத்தை பரிசோதித்த பொலிஸார் அதில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட மரக்குற்றிகள் காணப்பட்டதாகவும் இதனுடன் தொடர்புடைய சந்தேநபர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X