2025 மே 15, வியாழக்கிழமை

கேப்பாப்புலவில் 18 பேருக்கு கொரோனா

Editorial   / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

கேப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வந்தவர்களில் 18 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைந்த 257 பேர் கடந்த 09ஆம் திகதியன்று, கேப்பாப்புலவு விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்களின் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது 21ஆம் திகதியன்று 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர்கள் கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளார்கள்.

மேலும் ஒரு தொகுதி பேருக்கு தெற்கின் மில்லேரியாவில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்.பரிசோதனையின் போது, 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .