2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

கேரள கஞ்சாவுடன் தரகர் கைது

Editorial   / 2017 ஜூன் 18 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்   

இந்தியாவில் இருந்து படகு மூலம் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும், 248 கிலோகிராம் கேரள கஞ்சாவை, கிளிநொச்சி - பூநகரி - சங்குப்பிட்டி பகுதியில் வைத்து நேற்று (17) அதிகாலை, கார் ஒன்றுக்கு மாற்றும் பொழுது, பூநகரிப் பொலிஸார் மீட்டுள்ளனர்.  

இதன்போது, படகு மூலம் வந்தவர்களும் காரில் வந்தவர்களும் தப்பி ஓடிய நிலையில், தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

குறித்த சந்தேகநபரை விசாரணைக்கு உட்படுத்தியபோது, யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து, 12 கிலோகிராம் கேரள கஞ்சா, நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.  

விசாரணைகளின் பின் சந்தேகநபர் மற்றும் சான்றுப் பொருட்கள் என்பன, நாளை (19) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .