Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 16 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட், க. அகரன்
குடும்பத் தகராறு காரணமாக, குடும்பஸ்தர் ஒருவர் கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த சம்பவமொன்று, மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில், நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக, அக்குடும்பத்திலுள்ள தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாய்த் தர்க்கம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து, வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்ற தந்தை கைக்குண்டொன்றுடன் வீட்டுக்குள் நுழைந்து அதை வெடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். இதை அவதானித்த ஒருவர், அச்சம்பவத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள், மடு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்..
இதையடுத்து, இன்று (16) அதிகாலை பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட பாலம்பிட்டி 317ஆவது படையினர், குறித்த நபரைக் கைது செய்து, அவரிடம் கைக்குண்டையும் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தர், மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
42 minute ago
47 minute ago
2 hours ago