Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 மே 31 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
2020/2021 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கையேட்டினை மாணவர்களுக்கு வழங்க யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஏற்பாடு செய்துள்ளதாக, வவுனியா வளாகத்தின் மேயர் கலாநிதி ரி. மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், நாளை (01) காலை 8 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள வவுனியா வளாகத்திலும் பழைய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள இராமச்சந்திராஸ் புத்தக நிலையத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே, மாணவர்கள் தங்களது பாடசாலை அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டையை சமர்பித்து குறித்த கையேடுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த பிரிவுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான இணையவழி கருத்தரங்கொன்றும் வவுனியா வளாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த கருத்தரங்கு 01.06.2021 காலை 9 மணி முதல் ZOOM ஊடாக இடம்பெறும்.
இதற்கான முகவரி:
Meeting ID: 670 192 6578
கடவுச்சொல்: UAH@900Am
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago