Editorial / 2019 ஜூன் 07 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் – பேசாலை கடற்பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் 140 கிலோ 760 கிராம் நிறை கொண்ட கேரளக் கஞ்சாப் பொதிகளை, கடற்படையினர், நேற்று (6) கைப்பற்றியுள்ளனர்.
கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த டோலர் படகொன்றிலிருந்து குறித்த கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பேசாலை கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே, குறித்த டோலர் படகில் இருந்து கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
எனினும், குறித்த படகிலிருந்த சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கேரளக்கஞ்சாவையும் டோலர் படகையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக, தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago