Editorial / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், இடைநடுவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களுக்கான உதவிகளை ஆறு மாதங்களுக்குள் பெற்றுத்தருவதாக நாமல் ராஜபக்ஷ வாக்குறுதியளித்திருந்த நிலையில், தற்போது வரையில் அந்த வாக்குறுதியை நாமல் நிறைவேற்றவில்லையென, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டினார்.
துணுக்காய் பிரதேச செயலத்தில், நேற்று (29) நடைபெற்ற முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட கடன் வீட்டுத்திட்டம், மாதிரிக் கிராம வீட்டுத்திட்டம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கான வீட்டுத்திட்டம் போன்ற பல்வேறு வீட்டுத் திட்டங்களுக்கான நிதிகள் கிடைக்கப்பெறாததால், இடைநடுவே நிறுத்திவைக்கப்பட்டுள்ளனவெனச் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டுவந்ததை அடுத்து, ஆறு மாத காலங்களுக்குள், இந்த வீட்டுத்திட்டங்கள் தொடர்பான உதவிகளைப் பெற்றுத் தருவதாக, நாமல் வாக்குறுதியளித்திருந்தாரெனவும், ரவிகரன் கூறினார்.
இவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனவும், அவர் குற்றஞ்சாட்டினார்.
26 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
4 hours ago