2025 மே 07, புதன்கிழமை

கொடுப்பனவுக்காக மக்களை ஒன்றுகூட்டிய அதிகாரிகள்

Niroshini   / 2021 ஜூன் 03 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

சமுர்த்தி கொடுப்பனவு வழங்குவதாக கூறி, ஒட்டுசுட்டான் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி பயனாளி குடும்ப உறுப்பினர்கள், இன்று (03) கிராம அலுவலர் அலுவலகத்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், கிராம அலுவலக அதிகாரிகளால், மக்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, ஒட்டுசுட்டான் கிராம அலுவலர் அலுவலகத்தில், சமுர்த்தி கொடுப்பனவு பெற்றுக்கொள்வதற்காக, சுமார் 50 பேர் வரையில் ஒன்றுகூடி இருந்தனர்.

இதையடுத்து, தகவலறிந்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், மக்களை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்குரிய நடவடிக்கையை எடுத்தனர்.

அத்துடன், பிரதேச செயலாளர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, வீடு வீடாக சென்று பணத்தை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X